என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எட்டயபுரம் தாலுகா அலுவலகம்
நீங்கள் தேடியது "எட்டயபுரம் தாலுகா அலுவலகம்"
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம், பிதப்பபுரம், ஈராச்சி, இளம்புவனம், ராமனூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எட்டயபுரம் நில அளவை துறையினர் இதுவரை நிலத்தை அளந்து கொடுக்கவில்லை.
இதனால் இலவச பட்டா பெற்று பயனில்லாமல் உள்ளது. இந்நிலையில் இலவச வீட்டுமனை பட்டாவுக்குரிய நிலத்தை அளந்து தரவலியுறுத்தியும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரியும் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, தாலுகா செயலாளர் வேலுச்சாமி, தாலுகா குழு உறுப்பினர் செல்வக்குமார், ராமர், மூக்கையா தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தாசில்தார் வதனாளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
×

X